» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருட்டு வழக்கில் கைதான 2பேருக்கு ஓராண்டு சிறை : சிவகிரி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 13, ஜூன் 2024 10:05:22 AM (IST)

புளியங்குடி அருகே வாகனத்தை திருடிய வழக்கில் கைதான 2பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிவகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குடி பேருந்து நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை திருடிய வழக்கில் சென்னை பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த தங்க ரத்தினம் மகன் ராஜேஷ்(37) மற்றும் சென்னை கொருக்குப் பேட்டை அண்ணாதுரை மகன் திலிப் ராஜா (35) ஆகியோரை அப்போதைய காவல் ஆய்வாளர் கோவிந்தன் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவ்வழக்கின் விசாரணையானது சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரணை செய்த நீதிபதி காளீஸ்வரி குற்றவாளிகள் இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த புளியங்குடி காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-4 தேர்வு குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு : மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:20:28 PM (IST)

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: அதிகாரிகள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:12:38 PM (IST)
