» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈக்களின் பெருக்கத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் : சுகாதாரத்துறை அறிவுரைகள்!!

புதன் 12, ஜூன் 2024 5:40:08 PM (IST)

பருவநிலை மாற்றத்தால் ஈக்களினால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து சுகாதாரத்துறையின் அறிவுரைகள் வழங்கியுள்ளது.

தற்போது தென்மேற்கு பருவ மழைகாலம் தொடங்கி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதுபோல் கோடைகாலத்தில் கிடைக்கும் பழவகைகளும் மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கப்பெறுகிறது. இச்சூழலில் தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதும் பொது மக்கள் பழங்களை உண்டு அவைகளின் கொட்டைகள் மற்றும் அழுகிய பழங்களை சுகாதாரமற்ற முறையில் பொதுவெளியில் வீசுவதனாலும் சுகாதாரக்கேடு உருவாகிறது. 

இதன் மூலம் ஈக்களின் பெருக்கம் அதிகமாக காணப்பட்டு தொற்று நோய்கள் பரவ காரணமாகிறது. கழிப்பறையை பயன்படுத்திய பின்னரும் உணவு அருந்தும் முன்பும் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். உண்பதற்கான உணவுகளை ஈ மொய்க்காதவண்ணம் நன்கு மூடி பாதுகாக்கவேண்டும். உணவு பரிமாறும் பாத்திரங்களை சோப்பு நீரினால் நன்றாக கழுவவேண்டும். காய்கறிகள் மற்றும் பழவகைகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே சமைக்கவும் உட்கொள்ளவும் வேண்டும். 

நன்கு கொதிக்கவைத்து ஆறிய தண்ணீரையே குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளை தினமும் இரண்டுவேளை கிருமி நாசினி கொண்டு வீட்டின் தரையை சுத்தம் செய்யவேண்டும். அதுபோல் வீட்டின் சுற்றுபுறத்தில் தண்ணீர் தேங்காமலும் குப்பைகள் குவியாமலும் பராமரிக்கவேண்டும். ஏதேனும் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை சென்று உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று குமரி மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory