» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது கூட்டணி முரண்பாடு இல்லை : கார்த்தி சிதம்பரம்
புதன் 12, ஜூன் 2024 5:29:46 PM (IST)
தமிழ்நாட்டில் கூட்டணியால்தான் வெற்றி பெற்றோம், என்றாலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை தேனாம்பேட்டையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியபோது, காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளை சாராத நிலைக்கு வளர வேண்டும் என்று பேசியிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சு குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் ஆரம்பம் சரியாக இல்லை. ஏற்கனவே இருந்த மந்திரிகளை மீண்டும் அதே துறைகளில் நியமித்துள்ளனர். இவர்களிடம் மாற்று சிந்தனையோ அல்லது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணமோ இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் தெளிவான சிந்தனை மற்ற மாநில மக்களிடமும் வர வேண்டும்.
அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது வாடிக்கையானதுதான். அந்த வகையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டணியால்தான் வெற்றி பெற்றோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் எங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்வது கூட்டணிக்கு முரண்பாடானது இல்லை" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 18, மார்ச் 2025 5:21:35 PM (IST)

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:40:59 PM (IST)

தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:31:03 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:14:04 PM (IST)
