» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்பு!

புதன் 12, ஜூன் 2024 12:03:25 PM (IST)விளவங்கோடு இடைத்தேர்தல் வெற்றி பெற்ற காங்கிரஸின் தாரகை கத்பர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

குமரி மாவட்டம்,  விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக் இருந்த விஜயதரணி, பாஜக-வுக்கு சென்ற நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து காலியாக இருந்த விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல், மக்களவைத் தோ்தலுடன் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இந்நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, காங்கிரஸ் தமிழக கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory