» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல்? மேடையில் தமிழிசையிடம் அமித் ஷா கண்டிப்பு??

புதன் 12, ஜூன் 2024 11:57:23 AM (IST)

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் தமிழிசையிடம் அமித் ஷா கண்டிப்பாக பேசிய காட்சிகள் வெளியானது.

தமிழக பாஜகவில் அண்ணாமலை தரப்பு, தமிழிசை தரப்பு என இரு அணிகளுக்குள் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டிருப்பதாகவும் இது குறித்து ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா மேடையிலேயே தமிழிசையை அமித் ஷா கண்டித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் வெங்கைய நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார். அப்போது அவரை கூப்பிட்ட அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளிக்கிறார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசும் காட்சிகளில் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியானது.

இதனால், தமிழக பாஜக உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தமிழக பாஜக உள்கட்சி பூசல் குறித்து கட்சித் தலைமை இரு தரப்பிலிருந்தும் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறாத நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை - முன்னாள் தலைவர் தமிழிசை இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தமிழிசை இவ்வாறு கூறியிருந்தார். அதாவது, எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த போது கட்டுப்பாடு இருந்தது. நான் சிலரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன். கட்சியில் இருக்க சிலருக்கு அனுமதி இல்லை. அதாவது சமூக விரோத ரௌடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன்.

ஆனால் இப்போது அப்படியல்ல. கட்சியில் இப்போது ரௌடிகள் சேர்ந்து உள்ளனர். கட்சியில் கடுமையாக உழைக்கும் தலைவர்களுக்கு பதவி தர வேண்டும். மாநில தலைவர் சரியாக தான் இருக்கிறார். அவரின் நடவடிக்கை வேறு. ஆனால் நான் சொல்வது என்னவென்றால் இதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று நேரடியாக அல்லாமல், மறைமுகமாக அண்ணாமலை குறித்து கூறியிருந்தார். இதுதான் தற்போது கட்சிக்குள் உள்கட்சி பூசலாக வளர்ந்து, விளக்கம் கேட்கும் அளவுக்கு மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory