» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளம்பெண் போக்சோவில் கைது

புதன் 12, ஜூன் 2024 11:07:02 AM (IST)

போடி அருகே குழந்தைகள் காப்பகத்தில் 10 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். 

அதில் 10 வயது சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிறுவனிடம் விசாரித்தார். அப்போது காப்பக நிர்வாகி முனீஸ்வரி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் கூறினான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அதிகாரிகள் காப்பகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுக்கு, காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் முனீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து , அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory