» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்தவர் பாஜக உறுப்பினர்: அண்ணாமலை சர்ச்சை கருத்து!

செவ்வாய் 30, மே 2023 3:42:42 PM (IST)



ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தது பாஜக உறுப்பினர் ரவீந்திர ஜடேஜா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 5-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடித்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், சென்னை அணியின் வெற்றிக்கான ரன்னை அடித்தது பாஜக உறுப்பினர். அவரது மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ. அவர் ஒரு குஜராத்காரர். பாஜக உறுப்பினர் ஜடேஜாதான் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அணியில் ஒரு தமிழக வீரர்கூட விளையாடவில்லை. ஆனால், தோனிக்காக கொண்டாடுகிறோம். குஜராத் அணியில் அதிக ரன்களை எடுத்த சாய் சுதர்ஷன் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளதால், ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

annamalaமே 31, 2023 - 09:56:21 PM | Posted IP 49.37*****

annamola oru aalunu thookittu vaaran

CSK CSKமே 31, 2023 - 06:13:29 PM | Posted IP 172.7*****

TUTYONLINE நிர்வாகத்தின் கவனத்திற்கு, இந்த செய்தியை போடும் முன் அதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு போடவேண்டும். CSK வெற்றி, அதன் பின் திமுக அமைச்சர் பேச்சு, அதன் பின் திரு அண்ணாமலை பதில் சொல்லி இருக்கிறார். அந்த பதிலும் இங்கே தெளிவாக போட வில்லை. நம்ம ஊரு சேனல் tutyonline என்றும் தெளிவாக இருக்க வேண்டும்

PSCCமே 31, 2023 - 04:11:07 PM | Posted IP 172.7*****

commedyen . vetri petrathu tamilnadu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory