» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆருத்ரா வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் : ஐஜி ஆசியம்மாள்

வெள்ளி 26, மே 2023 5:13:43 PM (IST)

ஆருத்ரா வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஹிஜாவு மோசடி வழக்கில் கடந்த 17ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலி மூலம் பேசுவதால் தலைமறைவாக உள்ளவர்களை ட்ராக் செய்ய முடியவில்லை. ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்என்எஸ் நிதி மோசடி வழக்கில் இதுவரை ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் திருச்சி 17ஆவது வார்டு கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 


மக்கள் கருத்து

டேய் குமாருமே 27, 2023 - 03:19:41 PM | Posted IP 162.1*****

நீ யாருடா கோமாளி... இங்க வந்து கோடை விடுமுறை கேக்குற... போய் ட்விட்டர்ல குத்த வை...

Kumarமே 27, 2023 - 12:29:29 AM | Posted IP 172.7*****

வெயில் தாக்கம் அதிகம் இருந்தால் கோடை விடுமுறை நிடிக்க வேண்டும்

துபாய்மே 26, 2023 - 09:37:18 PM | Posted IP 172.7*****

அரசிடம் உதவி கேளுங்கள்... எளிதாக கிடைக்கும்... பிடித்து உள்ளே தள்ளுங்கள்... பேண்ட பரம்பரையை...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory