» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி உட்பட 8 புதிய மாவட்டங்களை உருவாக்க திட்டம் : அமைச்சர் தகவல்..!

சனி 1, ஏப்ரல் 2023 11:51:17 AM (IST)

தமிழ்நாட்டில் கோவில்பட்டி, பழனி, உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

அப்போது கேள்வி நேரத்தில், "ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். இதேபோல அரசு கொறடா கோவி செழியன், "டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம்  தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும்” வலியுறுத்தினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்; 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். நிதிநிலைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

அதுApr 2, 2023 - 07:19:27 PM | Posted IP 162.1*****

திருடர்கள் அதிகம் உள்ள மாவட்டம்

கந்தசாமிApr 2, 2023 - 10:23:16 AM | Posted IP 162.1*****

ஒரத்தநாடு செட்டிநாடு தனி நாடுதான் இதில் ஏன் தனிநாடு

ஆனந்த்Apr 2, 2023 - 10:20:51 AM | Posted IP 162.1*****

ஒவ்வொரு தாலுகாவையும் தனி தனி மாவட்டம் ஆக பிரித்தால் பராமரிப்பு செலவு குறையும்

ஒரத்தநாடுApr 1, 2023 - 10:37:17 PM | Posted IP 162.1*****

எங்கள் ஊரை தனி நாடாக அறிவிக்க வேண்டும்...:-p

Balan SApr 1, 2023 - 05:24:57 PM | Posted IP 162.1*****

நான் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதி மக்களின் நலன் கருதி ஆத்தூர் வட்டத்தை மாவட்டமாக அறிவித்தால் நன்றாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory