» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆஸ்கர் வென்ற இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

செவ்வாய் 21, மார்ச் 2023 3:20:38 PM (IST)



குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தாய் யானையை பிரிந்து காயங்களுடன் திரிந்த குட்டி யானை ஒன்று வனத்துறையின் பராமரிப்புக்கு வந்தபோது, யானை பராமரிப்பாளார்களான பொம்மன் - பெள்ளி தம்பதியர் அதனை அரவணைத்து வளர்க்கின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கும், குட்டி யானைக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உறவை ’தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படம் மூலம் காட்சிப்படுத்தியிருந்தார் நீலகிரியைச் சேர்ந்த இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ். இந்த ஆவணப்பட குறும்படத்திற்கு அண்மையில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பின்போது ஆஸ்கர் விருதை முதல்வரிடம் காண்பித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory