» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாட்ஜில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை : நெல்லையில் பரபரப்பு!

ஞாயிறு 19, மார்ச் 2023 8:05:17 AM (IST)

நெல்லையில் விடுதி அறையில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் (லாட்ஜ்) நேற்று முன்தினம் மாலையில் ஒருவர் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் அவர் நேற்று காலை வரை வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். அறையின் கதவை தட்டியபோது, உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தனர். 

அப்போது அங்கு அந்த நபர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர் ஆந்திர மாநிலம் பிரகதிநகரை சேர்ந்த ஜிதேந்திர நாயுடு (32) என்பதும், டாக்டரான அவர் தனது உறவினர் மணீஸ் பூஷன் உள்பட 3 பேருடன் ஆந்திராவில் இருந்து காரில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.

மேலும் கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் மதுரை வந்த அவர்கள் காரில் தூங்கி உள்ளனர். அப்போது ஜிதேந்திர நாயுடு திடீரென மாயமானதால் மணீஸ்பூஷன் மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததும் தெரியவந்தது. ஆனால் டாக்டர் ஜிதேந்திர நாயுடு எதற்காக நெல்லை வந்தார்?, அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் அவரது உறவினர்கள் வந்த பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். நெல்லையில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory