» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்க அனுமதி

ஞாயிறு 19, மார்ச் 2023 7:58:44 AM (IST)

நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. 

நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக தென்காசி வரை 72 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த வழித்தடத்தில் நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர், நெல்லை-பாலக்காடு, நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடம் மின்மயமாக்கப் பட்டு, வேகமாக ரயில்களை இயக்குவதற்கு வசதியாக தண்டவாளம் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் இந்த பாதையில் அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. 

மேலும் மின்சார ரயிலும் இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. வளைவு பகுதிகளில் மட்டும் வேகத்தை குறைத்து இயக்குமாறு கூறியுள்ள நிர்வாகம், அந்த இடங்களையும் குறிப்பிட்டு உள்ளது.  இதையடுத்து இந்த பாதையில் ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் ரயில்கள் வந்து செல்லும் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory