» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்!
சனி 18, மார்ச் 2023 12:14:57 PM (IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை 21-ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தனர்.
அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள 922 கூட்டுறவு வங்கிகளிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அறிமுகம்
புதன் 22, மார்ச் 2023 12:15:54 PM (IST)

பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகைக்கு அடி உதை.. போலீசில் புகார்!!
புதன் 22, மார்ச் 2023 12:10:58 PM (IST)

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்காசி பாதிரியார் மீது புகார்
புதன் 22, மார்ச் 2023 11:30:30 AM (IST)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 4 இடங்களில் நகை-பணம் கொள்ளை
புதன் 22, மார்ச் 2023 7:59:05 AM (IST)

விபத்தில் எஸ்.ஐ., போலீஸ்காரர் இறந்த வழக்கு: வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை!
புதன் 22, மார்ச் 2023 7:56:59 AM (IST)

தூத்துக்குடி, நெல்லையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.28¾ லட்சம் சிக்கியது
புதன் 22, மார்ச் 2023 7:54:06 AM (IST)
