» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தள்ளுவண்டியில் ஆவின் பொருட்கள் விற்பனை திட்டம்: தொழில் முனைவோருக்கு அழைப்பு
செவ்வாய் 24, ஜனவரி 2023 5:04:05 PM (IST)
தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக ஆவின் பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் கூறியதாவது: தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.
மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும் ஆவின் பொருட்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம் என்று கூறினார்.
ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகை செலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து, விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வழங்கப்படும். வங்கி கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்று அளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 1, பிப்ரவரி 2023 11:40:11 AM (IST)

அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள்: காவல் துறை ஆணையரிடம் சரத்குமார் புகார்
புதன் 1, பிப்ரவரி 2023 11:30:17 AM (IST)

தென்னை, வாழைகளை சேதப்படுத்திய .காட்டு யானை : கடையம் அருகே பரபரப்பு
புதன் 1, பிப்ரவரி 2023 11:05:14 AM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு : இபிஎஸ் அறிவிப்பு
புதன் 1, பிப்ரவரி 2023 10:06:37 AM (IST)

கோயில்கள் பெயரிலான போலி இணைய தளங்களை முடக்க உயர்நீதிமன்றம் ஆணை
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:25:18 PM (IST)

குட்கா, பான்மசாலாவுக்கு தடை விதிக்க புதிய சட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:51:10 PM (IST)

maaduJan 24, 2023 - 05:38:15 PM | Posted IP 162.1*****