» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:29:46 PM (IST)
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன். தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் கைகோர்க்க வேண்டும் என சசிகலா கூறினார்.

அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தொண்டர்களின் குமுறலைப் பார்த்துக் கொண்டுள்ளேன். இரட்டை இல்லை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது.நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன். சில பேரை எடை போட்டுக் கொண்டுள்ளேன். பொதுச் செயலாளர் பதவியை அளிக்கக் கூடிய இடத்தில் தொண்டர்கள் தான் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க. இணைப்பு நடக்கும்.
தேர்தலின்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன்' என்றார். ஆனால், இன்னும் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை. ஒருவேளை சாவி தொலைந்து போய்விட்டது போல. யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா? நம்மை அவர்கள் கட்டுப்படுத்த. என் நிழலிடம் கூட யாராலும் நெருங்க முடியாது அனைவரும் தி.மு.க.வை வீழ்த்த கைகோர்க்க வேண்டும்" என்று சசிகலா கூறினார்.
மக்கள் கருத்து
MGR RASIKARKALJan 30, 2023 - 04:23:49 PM | Posted IP 162.1*****
மக்களை பற்றியும் அரசியல் பற்றியும் பேச ஒரு தகுதி வேண்டாமா ? இவர் ஜெ வின் புகழுக்கு களங்கம் விளைவித்தவர் இவரை போலவே டயர் நக்கியும் பதவி பதவி என்று அழைப்பவர். இவர்களை அதிமுக தொண்டர்கள் ஒதுக்கித்தள்ளவேண்டும். இவர்கள் அதிமுகவில் நுழைந்துவிட்டால், அதிமுக அழிந்துவிடும்.
வேலைக்காரிJan 26, 2023 - 12:44:20 PM | Posted IP 162.1*****
என்பதை மறந்து விட்டு பேச கூடாது...
,மக்கள்Jan 26, 2023 - 11:23:15 AM | Posted IP 162.1*****
இரட்டை இலையை ஆட்டைய போட பார்க்கிறார் கொழுப்பு
நீJan 25, 2023 - 05:00:42 PM | Posted IP 162.1*****
உயிரோட இருக்கிறதே ஆபத்து தான்
மேலும் தொடரும் செய்திகள்

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 1, பிப்ரவரி 2023 11:40:11 AM (IST)

அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள்: காவல் துறை ஆணையரிடம் சரத்குமார் புகார்
புதன் 1, பிப்ரவரி 2023 11:30:17 AM (IST)

தென்னை, வாழைகளை சேதப்படுத்திய .காட்டு யானை : கடையம் அருகே பரபரப்பு
புதன் 1, பிப்ரவரி 2023 11:05:14 AM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு : இபிஎஸ் அறிவிப்பு
புதன் 1, பிப்ரவரி 2023 10:06:37 AM (IST)

கோயில்கள் பெயரிலான போலி இணைய தளங்களை முடக்க உயர்நீதிமன்றம் ஆணை
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:25:18 PM (IST)

குட்கா, பான்மசாலாவுக்கு தடை விதிக்க புதிய சட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:51:10 PM (IST)

JAY JAY JAYJan 30, 2023 - 04:24:51 PM | Posted IP 162.1*****