» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி கருவி பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

வெள்ளி 2, டிசம்பர் 2022 12:48:49 PM (IST)



அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி கருவியை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக் காலங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துகளால் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual Current Device) கருவியை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புகளுடன் இந்த கருவியை பொருத்துவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் இந்த கருவியை பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory