» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்

வியாழன் 1, டிசம்பர் 2022 11:01:48 AM (IST)

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) ஆகியவை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும். 

மேலும் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) டிசம்பர் 5 முதல் 10 வரையும் டிசம்பர் 12 முதல் 15 வரையும் 10 நாட்களுக்கு மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06654) டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு 60 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். 

மதுரை - கச்சக்குடா வாராந்திர விரைவு ரயில்  டிசம்பர்   7 அன்று மதுரையில் இருந்து காலை 05.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 06.30 மணிக்கு 60 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory