» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாக ஜே.பி.நட்டா கூறினார் - எல்.முருகன் விளக்கம்

சனி 24, செப்டம்பர் 2022 12:29:23 PM (IST)

எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாகத்தான் ஜே.பி.நட்டா கூறியதாக மத்திய அமைச்சர் எல் முருகன் விளக்கம் அளித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாக கூறியதாக தகவல் வெளியானது. இதனால் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது  "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக் கொள்ளப்பட வில்லை.எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் ஜெ.பி நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்" என்றார். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 24, 2022 - 04:54:13 PM | Posted IP 162.1*****

ஆரம்பகட்ட பணிகளில் 95% என்று ஏழு ஆண்டுகள் கழித்து சொல்வதற்கு வெட்கம் இல்லையா

ARASAMUTHUSep 24, 2022 - 12:40:58 PM | Posted IP 162.1*****

L. MURUGAN மாதிரி அறிவாளிகள் எல்லாரும் உங்க கட்சியில் தான் இருக்கிறீர்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory