» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை அனுமதிப்பது அமைதிக்கும் ஊறு விளைவிக்கும்: சீமான் எச்சரிக்கை!

வெள்ளி 23, செப்டம்பர் 2022 3:38:40 PM (IST)

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல!

மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும்.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

அல்லேலூயாSep 25, 2022 - 05:27:27 PM | Posted IP 162.1*****

இவனைப் போல உளறுவாயானால் தமிழ்நாட்டிற்கு கேடு...

SUNROSESep 25, 2022 - 01:45:31 PM | Posted IP 162.1*****

அதை அப்படியே பகுத்தறிவு குடும்பம் தத்தி குடும்பத்தை கேளுங்க அந்த குடும்பமே கோயிலுக்கு வழிபாடே போகிறார்கள் அதுல யாரு டுபாக்கூர் ?

MONROSESep 24, 2022 - 12:39:39 PM | Posted IP 162.1*****

உணர்வில்லாத மத அடிமைகள் அறிவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும். அமைதியான தமிழ் நாடு சீரழிவது உறுதி.

SUNROSESep 23, 2022 - 04:08:32 PM | Posted IP 162.1*****

மேடையிலே இந்துக்களை குறை கூறி கொண்டு இளைஞர்களை ஏமாற்றிக்கொண்டு , தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் / திருப்பதி இந்து கோவிலுக்கு கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறான் இந்த டுபாகூர் ஆமை . இந்த லட்சணத்தில் இவன் பாஜக /அதிமுக /திமுகவை குறை சொல்ல இவனுக்கு அருகதையில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory