» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்டாசுகள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் ஆகாஷ் தகவல்

திங்கள் 12, செப்டம்பர் 2022 11:19:27 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தென்காசி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ் தற்காலிக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் வருகிற 30- ந் தேதிக்குள் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலைவசதி கொள்ளளவு சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம், கடை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம் சமர்பிக்க வேண்டும்.

தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ. 500 அரசு கணக்கில் செலுத்தி அனுமதிக்கான அசல் செலுத்துதல், இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை கடை அமைக்க உத்தேசித்துள்ள கட்டடத்தில் சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆவணங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிந்த உடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரங்களை இ -சேவை மையங்கள் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ் வழிமுறை பொருந்தாது. உரிய உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory