» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சினிமா ஆசை காட்டி இளம்பெண்கள் சீரழிப்பு: இயக்குனரின் பெண் உதவியாளர் வாக்குமூலம்!

சனி 10, செப்டம்பர் 2022 10:57:09 AM (IST)

சேலத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஆபாச படம் எடுத்து மோசடி செய்த விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனரை போலீசார் 6 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்ததுடன், பல இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக வந்த புகாரின் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவரது உதவியாளரான ஜெயஜோதி(23) என்பவரும் கைது செய்யப்பட்டார். 

ஜெயஜோதியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வேல்சத்ரியன் 3 இளம்பெண்களை நிர்வாணமாக படம் எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் ஜெயஜோதியை அவர்கள் நடத்தி வந்த அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நேற்றுடன் ஜெயஜோதியின் 3 நாள் காவல் முடிந்தது. இதையடுத்து அவரை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் மீண்டும் அடைத்தனர். இதேபோல் வேல்சத்ரியனையும் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மனுதாக்கல் செய்யப்பட்டது.  இதற்காக அவரை நேற்று மதியம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீசாரின் மனுவை விசாரித்த நடுவர் தினேஷ்குமார், 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அப்போது, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவரை அவரது மனைவி சந்தித்து பேசினார்.  பின்னர், உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் வேல்சத்ரியனை ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

DdbdhdhSep 10, 2022 - 11:11:20 AM | Posted IP 162.1*****

அவல வெளிய விடாதீங்க சார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory