» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 17, ஆகஸ்ட் 2022 12:09:40 PM (IST)

எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், அதிமுகவில் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்தலாம் என்று தீா்ப்பளித்தாா். 

இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயா்நீதிமன்றமே, 2 வாரங்களில் விசாரித்து தீா்வு காண உத்தரவிட்டது. இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சாா்பில் உயா் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டதுடன், தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடமும் முறையிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பாா் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீா் செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளில் விசாரித்தாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , இந்த வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன்பாக திரண்ட அவரது  ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மக்கள் கருத்து

AMMA VISUVASIKALAug 17, 2022 - 12:27:20 PM | Posted IP 162.1*****

மீண்டும் EPS தான் தலைவராக வருவார். எங்கள் ஆதரவு அவருக்குத்தான். டயர் கும்பிடு நாயகனுக்கு வாய்ப்பு இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory