» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வண்டி கருப்பணசாமி கோவில் திருவிழா: ரயிலை நிறுத்தி 100 ஆடுகளை பலியிட்டு வழிபாடு!

புதன் 17, ஆகஸ்ட் 2022 10:24:43 AM (IST)



அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ரயிலை நிறுத்தி  100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு ரயில்வே ஊழியர்கள் வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. வாகன ஓட்டுனர்களை விபத்தில் இருந்து காக்கும் கடவுளாக கருதப்படும் வண்டி கருப்பணசாமிக்கு ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தப்படும். குறிப்பாக வாகனங்கள் வைத்துள்ளவர்கள் இங்கு வந்து ஆடுகளை பலியிட்டு அதனை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வழங்குவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் இது போன்ற வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த வருடம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து ஏராளமானோர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். குறிப்பாக ஆடி கடைசி நாட்களான நேற்றும், இன்றும் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று  திண்டுக்கல்லில் இருந்து திருச்சி சென்ற சரக்கு ரயிலை நிறுத்தி அதில் இருந்த ஊழியர்கள் இறங்கி வந்து வண்டி கருப்பணசாமியை வழிபட்டனர். 

அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து எலுமிச்சம்பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை எடுத்து வந்து ரயில் முன்பு கட்டி அதன் பிறகு அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் வண்டி கருப்பணசாமி சாலை விபத்துகளை தடுக்கும் கடவுளாக இருந்து வருகிறார். இந்த கடவுளுக்கு ரயிலை நிறுத்திய சாமி என்ற பெயரும் உள்ளது. சாலை விபத்துகள் மட்டுமின்றி ரயில் விபத்துகளையும் வண்டி கருப்பணசாமி தடுத்து வருவதாக நம்பி வருகிறோம்.

இதனால் ஆடி மாதத்தில் கடவுளுக்கு வழிபாடு நடத்தி தங்கள் வாகன ங்களுக்கு பூஜை செய்து அதன் பிறகு பயணத்தை தொடர்ந்தால் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். அதன்படி ஆடி கடைசி நாளான இன்று ஏராளமான வாகனங்கள் மூலம் இங்கு பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் சுவாமி வழிபாடு மட்டுமின்றி ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனும் செலுத்தி வருவதில் இருந்தே வண்டி கருப்பணசாமியின் மகத்தும் தெரிய வரும் என்றனர். பக்தர்கள் வருகையால் இன்று கோவில் வளாகத்தில் கூட்டம் அலை மோதியது.


மக்கள் கருத்து

ஆடுAug 19, 2022 - 03:01:23 PM | Posted IP 162.1*****

ஒவ்வொருத்தரும் வயிறு வச்சிருக்காங்க பாரேன். என்ன கொடுமை சரவணா

ஆடுAug 17, 2022 - 01:05:14 PM | Posted IP 162.1*****

நீங்க சாவாம இருக்க நாங்கதான் பலிகடாவா... புல்ஷிட் ஹூமன்ஸ்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory