» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துபாயில் இருந்து கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல்: வாகன சோதனையில் 4 பேர் சிக்கினர்

சனி 13, ஆகஸ்ட் 2022 5:20:49 PM (IST)

நாங்குநேரி அருகே வாகன சோதனையின் போது துபாயில் இருந்து கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் நாங்குனேரி டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, காரில் இருந்த அலாவுதீன் தனது ஆசன வாய் பகுதியில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரிடமிருந்த பாஸ்போர்ட்டையும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். அதன் பேரில் காரில் இருந்த அலாவுதீன் (39), வீரபுத்திரன் (40), செந்தில்குமார் (36), பிரவீன் சார்லஸ் (32) 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

துபாயிலிருந்து திருவனந்தபுரம் விமானநிலையம் வழியாக இந்தியாவுக்கு வரும்போது தங்கத்தை கடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையில் கடுமையான பாதுகாப்புகளையும் மீறி தங்க கடத்தல் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கும்பலில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது . துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் நாங்குநேரியில் பிடிபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory