» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாய்லாந்தில் இருந்து பாம்பு, குரங்கு, ஆமை கடத்தல் : சென்னை விமானநிலையத்தில் சிக்கிய வாலிபர்!

சனி 13, ஆகஸ்ட் 2022 4:45:52 PM (IST)



தாய்லாந்தில் இருந்து பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவ விலங்குகளை கடத்தி கொண்டு வந்த வாலிபரை சென்னை விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

தாய்லாந்து நாட்டிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த முகமது ஷகீல் (21). அவர் மீது அதிகாரிகள் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பெரிய கூடையை சந்தேகத்தில் திறந்து சோதனை செய்தனர்.

அதில் தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவர்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் விசாரிக்கும் பொழுது அவர் முறையான தகவல் எதுவும் தரவில்லை. அதற்கு வேண்டிய ஆவணங்களும் அவர் வைத்திருக்கவில்லை. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

வட அமெரிக்கா நாட்டில் உள்ள கிங் ஸ்நேக் என்ற விஷமற்ற பதினைந்து பாம்புகளும், மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் பால் பைத்தான் என்ற ஒரு வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க நாட்டில் சேஷல்ஸ் தீவில் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்ற ஒருவகை ஆமை வகைகள் 2, மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி 1 என மொத்தம் 23 விலங்குகள் இருந்தன.

Also Read - நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
இதையடுத்து அந்த கடத்தல் ஆசாமியிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு, அங்கு தங்கி, இவைகளை அங்கிருந்து வாங்கி வந்துள்ளார் என்று தெரியவந்தது. இவைகளை எதற்காக வாங்கி வந்தார்? என்று எதுவும் தெரியவில்லை. இது விஷமற்ற பாம்பு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனாலும் இவைகளை கொண்டு வரும்போது, முறையாக சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் சான்றுகள் பெற்று, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்தே கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விலங்குகள் எதற்குமே மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றுகள் இல்லை. எனவே இவைகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதோடு அந்த திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் அந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கடத்தல் ஆசாமியிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை இவர் எதற்காக கொண்டு வந்தார் என்பது பற்றி விசாரணை செய்கின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory