» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை : குற்றாலத்தில் பரபரப்பு

சனி 13, ஆகஸ்ட் 2022 10:14:42 AM (IST)

குற்றாலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன் (54). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவருக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்தார். இந்நிலையில் குற்றாலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் நீதிபதி நேற்று வந்திருந்தார். அப்போது அவருடன் பார்த்திபனும் வந்திருந்தார். இருவரும் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். 

நள்ளிரவு நேரத்தில் பார்த்திபன் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே விடுதியில் இருந்த ஊழியர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது பார்த்திபன் தங்கி இருந்த அறையில் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டபடி பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இறந்து கிடந்த அவரது கையில் துப்பாக்கியும் இருந்தது. 

இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த விடுதி ஊழியர்கள் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்திபன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory