» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் தாறுமாறாக கட்டணம் உயர்வு

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 4:29:28 PM (IST)

தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களில் கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால் வெளியூரில் இருப்பவர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.

இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ள பலர் முன்பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பஸ் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


மக்கள் கருத்து

flight la poravarAug 12, 2022 - 06:57:39 PM | Posted IP 85.13*****

sir flightkum rate athigama irukku. train layum tatkal, premium tatkal podranga. ennanu kelunga sir

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory