» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பரோட்டா: மாற்றி யோசித்த நெல்லை இளைஞர்கள்!!

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:05:10 PM (IST)

நெல்லை அருகே கோவில் திருவிழாவில் போது பக்தர்களுக்கு பரோட்டா அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடலில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆடிமாத திருவிழா நடைபெற்ற வருகின்றது. அந்த வகையில் திருவிழாவின் 7-ம் நாள் அன்று ஸ்ரீமன் நாராயணசாமி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர். 

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . பொதுவாக அன்னதானம் என்றால் கூட்டு, பொரில் கலந்த உணவாக இருக்கும். ஆனால் இப்பகுதி இளைஞர்கள் சற்று மாற்றி யோசித்து பக்தர்களுக்கு அன்னதானமாக பரோட்டா வழங்கினர். 200 கிலோ மைதா மாவை கொண்டு சுமார் 8 ஆயிரம் பரோட்டாவை அப்பகுதி இளைஞர்கள் முயற்சியில் தயார் செய்யப்பட்டு பரோட்டா அன்னதானம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

efefbAug 12, 2022 - 01:00:27 PM | Posted IP 162.1*****

semma

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory