» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி : முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 11:46:25 AM (IST)



உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உப்பளத் தொழில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும். மழைக் காலங்களில் உப்பளத் தொழில் அடியோடு நிறுத்தப்பட்டுவிடும். இதனால் உப்பளத் தொழிலாளர்கள் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலை உள்ளது. எனவே,மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000/- நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்

மேலும் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், திமுக எம்.பி. கனிமொழி, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory