» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம்: தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 8:53:17 AM (IST)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் வீரமரணம் செய்தி கேட்டு வேதனையுற்றேன். அவருடன் வீரமரணம் அடைந்த 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி மற்றும் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். மேலும் தமிழக வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory