» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணி: காவலர்களுக்கு பிரியாணி விருந்தளித்த டிஜிபி சைலேந்திரபாபு!

வியாழன் 11, ஆகஸ்ட் 2022 12:30:29 PM (IST)



செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களின் பணியைப் பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. 162 நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்த விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் பணியில் ஈடுபட்ட காவலர்களின் பணியை பாராட்டும் விதமாக அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்துள்ளார்.  மேலும் காவலர்களுடன் அமர்ந்து அவரும் உணவருந்தினார். செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு 3 நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory