» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி!

வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:55:34 AM (IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், 44 செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் 12 நாள்கள் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.  இதில்  வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக சுட்டுரையில் தமிழ் மொழியில் பதிவிட்ட மோடி, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும்  மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், உங்களின் பாரட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரு குணங்கள். உங்களின் நிலையான ஆதரவை எதிர்பார்ப்பதுடன், இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழகத்திற்கு வாய்ப்பளிக்க கோரிக்கை வைக்கிறேன். யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory