» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல், பதற்றம்:போலீஸ் குவிப்பு

சனி 6, ஆகஸ்ட் 2022 4:48:39 PM (IST)நெல்லையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

நெல்லை தச்சநல்லூர் அருகே நடுத்தெரு, பால் கட்டளையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பேச்சிராஜ் (26). ஐடிஐ படித்திருந்தார். கட்டிட தொழிலாளி. இவருக்கு வெள்ளத்தாய் (19) என்ற மனைவியும் 3 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை பேச்சிராஜ் தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டின் அருகே உள்ள சாய்பாபா கோயில் முன்பு உறவினர் ஒருவருடன் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் கும்பல், இவரை வழிமறித்தது.

பின்னர் அவருடன் வந்த அவரது உறவினரை விரட்டி விட்டு, பேச்சிராஜை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சிராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாசானமூர்த்தி என்பவரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜேசிபி டிரைவரான அவர் தூத்துக்குடியில் வேலை செய்து வந்தார்.

2020ம் ஆண்டு பொங்கலையொட்டி ஊருக்கு வந்த போது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அவர் கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 10 பேர் மீது ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பேச்சிராஜ் 9வது குற்றவாளி ஆவார். அந்த விவகாரத்தில் தற்போது பேச்சிராஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக பேச்சிராஜ் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பால் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர்.

அவர்கள் பேச்சிராஜியின் உடலை எடுக்க விடாமல், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அந்த பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சிராஜ் உடலைப் பார்த்து அவரது மனைவி வெள்ளத்தாய் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதேபோல் மதுரை பைபாஸ் சாலை பால்கட்டளை விலக்கு பகுதியிலும் மறியல் நடந்தது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

கமிஷனர் அவினாஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு, அரசு வேலை வழங்கவேண்டும், கொலையாளிகளை குண்டர் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory