» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் : தனியாா் உணவகத்துக்கு சீல்!

சனி 6, ஆகஸ்ட் 2022 8:56:31 AM (IST)நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தனியாா் உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறாா்கள். மேலும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா்கள். 

மருத்துவமனை வளாகத்தில் முந்தைய அம்மா   உணவகம் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் தோவாளையை பகுதியை  சார்ந்த எஸ். கிருஷ்ணகுமார் என்பவர் பாலாஜி கேண்டீன் என்ற பெயரில் தனியார் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த தனியாா் உணவகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு திடீா் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து தகவல் அறிந்ததும் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் மருத்துமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவா்களிடம் நலம் விசாரித்தாா். 

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், மாநாகராட்சி அதிகாரிகளும் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து மாநகர நகா்நல அதிகாரி (பொ) ஜான் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், தியாகராஜன், வருவாய் ஆய்வாளா் ஆல்ரின், வருவாய் உதவியாளா் முருகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை அந்த உணவகத்தை பூட்டி சீல் வைத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory