» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக பொதுக் குழு வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரிய மனு: மன்னிப்பு கோரியது ஓபிஎஸ் தரப்பு!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 4:34:34 PM (IST)
அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அளிக்கப்பட்ட மனு தொடா்பாக நீதிபதி கண்டனம் தெரிவித்தததைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.

அப்போது, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஆக.5) தள்ளி வைக்க வேண்டும் என வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தாா். அதே நேரம் வழக்கை ஆக.8 திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘இந்த வழக்கின் நீதிபதியை மாற்றுவது குறித்து தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுதொடா்பாக இன்னும் முடிவெடுக்காத நிலையில் (ஆக.5) வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்க கூடாது’ என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீா் செல்வத்தின் நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், களங்கப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தீா்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் அல்லது திருத்தம் இருந்தால் தன்னிடமே முறையீடு செய்யலாம் என்றாா். இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியதுடன் வழக்கில் அவரே நீதிபதியாக நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது: ஈபிஎஸ் மீது தினகரன் தாக்கு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:03:52 PM (IST)

தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 3:36:09 PM (IST)

ஒன்றினைந்து செயல்படுவோம்: சசிகலா, எடப்பாடி, தினகரனுக்கு ஒபிஎஸ் அழைப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:48:07 AM (IST)

இந்து மகாசபா தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: கார் கண்ணாடிகள் உடைப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:33:42 AM (IST)

கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்தம்: அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:19:56 AM (IST)

கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டடத் தொழிலாளி அடித்து கொலைB: நெல்லையில் பயங்கரம்!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:17:10 AM (IST)
