» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 12:18:54 PM (IST)

மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தன்னுடைய தாயுடன் தாம்பரத்தில் இருந்து அரசு பஸ்சில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) அமர்ந்திருந்தார். 

ஓடும் பஸ்சில் சதீஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை பஸ்சில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாயார் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அவரை தாக்கி உள்ளனர். பஸ் மதுராந்தகத்தை அடையும் போது அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். 

போலீஸ் விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சதீஷ் மதுராந்தகத்தை அடுத்த முதுகரை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் சென்னை பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் சதீஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory