» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிராம நிர்வாக அலுவலர்கள் திருமண சான்று வழங்க கூடாது: வருவாய்த் துறை உத்தரவு!

சனி 2, ஜூலை 2022 12:36:41 PM (IST)

கோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத் துறை உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்கள், திருமண சான்று வழங்க கூடாது என, வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத் துறை கோவில்களில் திருமணம் செய்வோர், தங்களுக்கு இது தான் முதல் திருமணம் என்பதை உறுதி செய்ய, வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து முதல் திருமண சான்று பெற்று சமர்ப்பிக்கின்றனர். சமூக நலத் துறையின் திருமண உதவித்தொகை பெறுவதற்கும், இத்தகைய சான்று பெற, பொது மக்கள், வி.ஏ.ஓ.,க்களை அணுகுகின்றனர்.இதுபோன்ற சான்றிதழ் வழங்க, எவ்வித அரசாணையும், வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில், வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வருவாய் நிர்வாக துறை, பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்:வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சார் - பதிவாளர் அலுவலகங்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகங்கள், திருமண பதிவின் போது வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து, முதல் திருமண சான்று பெற்று வருமாறு கேட்க வேண்டாம். இதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட நபர் திருமணமாகாதவர் என்பதற்கான, வருவாய்த் துறையின் சான்று இ - சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory