» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துர்நாற்றம் வீசுவதாக புகார்: ஆவின் பால் பண்ணை தோவாளைக்கு மாற்றப்படுமா? ஆட்சியர் ஆய்வு

வியாழன் 19, மே 2022 3:46:43 PM (IST)



நாகர்கோவில் பால் பதப்படுத்தப்படும் நிலையத்திலிருந்து கழிவுநீரை சுத்திகரிக்கப்பட்டு அப்புறப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

நாகர்கோவில் மாநகரின் மையப்பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு பால் தரம் பிரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது. மேலும் ஐஸ்கிரீம், தயிர், மைசூர்பாகு, கேக் உள்ளிட்ட ஆவின் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் கூறப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகேஷ்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆவின் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 
இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் ஆய்வு நடத்தினர். ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்துவது எப்படி? என்பது குறித்து அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.மேலும் ஆவின் பால்பண்ணையில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் கேட்டறியப்பட்டது. அப்போது ஆவின் பால் பண்ணையில் போதுமான இடவசதி இல்லை என்றும், எனவே பால் பண்ணையை தோவாளை பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்ப ட்டது. இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க ப்படும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

இதுபற்றி ஆவின் பொது மேலாளர் சேகர் கூறுகையில், "ஆவின் பால் பண்ணை தற்போது ஒரு ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த இடம் போதுமான வசதியாக இல்லை. எனவே ஆவின் பால் பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம்.  தற்போது தோவாளை பகுதியில் ஆவின் பால் பண்ணை அமைக்க போது மான இடம் இருப்பதை கண்டறிந்து உள்ளோம். அந்த இடத்தில் ஆவின் பால் பண்ணைக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கூறி உள்ளோம். இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். 

ஆவின் பால் பண்ணையை பொறுத்த மட்டில் தற்போது தினமும் 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து 9 ஆயிரம் லிட்டர் பாலும், வெளி மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரம் லிட்டர் பாலும் வாங்கப்படுகிறது.  நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், தயிர் போன்ற பொருட்களும் இங்கு தயார் செய்யப்பட்டு வருகிறது” என்றார். ஆய்வின்போது ஆவின் துணை பொது மேலாளர் மதியழகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory