» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது மவுனம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
வெள்ளி 13, மே 2022 4:56:19 PM (IST)
அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது மவுனம் காப்பது ஏன்? என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களை பற்றியோ, மக்கள் பிரச்சினைகள் பற்றியோ கவலைப்படாத அரசு திமுக அரசு. தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி வருகிறார்கள்.
நிதி ஆதாரத்தை திரட்ட இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயரும், அரசு ஊழியர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் நம்ப வைத்து தி.மு.க. கழுத்தை அறுத்துள்ளது. கொரோனா பரவலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள சூழலில் சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய சுமை வேதனை அளிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து சட்டத்தை நிறைவேற்றப்பட்டது. இதனால் யார் நினைத்தாலும் அங்கு விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வர முடியாது. வீடு கட்டுபவர்கள் மிகப் பெரும் சோதனையை சந்தித்து வருகிறார்கள்.செங்கல், சிமெண்ட், கம்பி விலை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலையை தி.மு.க. அரசு கட்டுபடுத்தவில்லை. சென்னையில் மாற்று இடம் ஒதுக்காமல் குடியிருப்புகளை அகற்றுவது வேதனை அளிக்கிறது. சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் நிலையில் உள்ள மக்களுக்கு அரசு உதவ வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து கட்சிகளும் மவுனம் சாதிக்கின்றன. உள்கட்டமைப்பை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசின் 8 வழி சாலை திட்டத்தை அ.தி.மு.க அரசு ஆதரித்தது. அ.தி.மு.க. விவசாயிகளுக்கு எதிரான கட்சி அல்ல. இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் அதிக அளவில் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று கொடுத்துள்ளோம்.
அ.தி.மு.க ஆட்சியில் 14,000 பேருந்துகள் வாங்கப்பட்டது. தற்போது இந்த பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை ஓட்டுநர்களே தெரியபடுத்தி வருகிறார்கள். நெல்கொள்முதல் நிலையங்களில் லட்ச கணக்கான நெல்மூட்டைகள் நனைகிறது. ஆனால் தி.மு.க. அரசு எதை பற்றியும் கவலைபடாமல், போதிய கவனம் செலுத்தாமல் உள்ளது. அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை : அமைச்சர் மனோதங்கராஜ் வரவேற்பு
புதன் 18, மே 2022 5:38:04 PM (IST)

ஜெ.வின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி பேரறிவாளன் விடுதலை: அதிமுக வரவேற்பு
புதன் 18, மே 2022 5:30:13 PM (IST)

குமரி மாவட்டத்தில் 128 மையங்களில் 37,418 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகிறார்கள் : ஆட்சியர் தகவல்!
புதன் 18, மே 2022 5:21:50 PM (IST)

குற்றால அருவியில் குளிக்க தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 18, மே 2022 5:14:13 PM (IST)

தாய்மையின் இலக்கணமாக அற்புதம்மாள் விளங்குகிறார் : முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
புதன் 18, மே 2022 5:03:10 PM (IST)

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் : காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
புதன் 18, மே 2022 4:15:45 PM (IST)

ஆமாமேமே 14, 2022 - 08:30:32 AM | Posted IP 162.1*****