» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை மக்களுக்கு 40,000 டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடை இல்லை: ஐகோர்ட் உத்தரவு

வியாழன் 12, மே 2022 4:05:33 PM (IST)

இலங்கை மக்களுக்கு அனுப்பப்படும் 40,000 டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதாக 40,000 டன் அரிசியை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்படுவதாக கூறி திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில் ஒரு கிலோ அரிசி ரூ.33.50 என்ற விலையின் அடிப்படையில்  40,000 டன் அரிசியை கொள்முதல் செய்ய தமிழக அரசு ரூ.134 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்திய உணவுக்கழகம் 1 கிலோ அரிசியை ரூ. 20-க்கு விற்பனை செய்வதாகவும், அதில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் ரூ.54 கோடி மிச்சமாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பிய போது இந்திய உணவுகளாக அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான  தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே அரசு கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், மற்றும் செந்தில் குமார் ராம மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஒன்றிய அரசின் அனுமதியுடன் அரிசி அனுப்ப படுவதாகவும், அவசர நிலை நேரங்களில் டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்திற்கு விலக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரிசி கொள்முதலுக்கு தடை விதிக்க முடியாது என கூறி,  வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.


மக்கள் கருத்து

தமிழன்மே 13, 2022 - 10:09:54 AM | Posted IP 162.1*****

இனி நமக்கு கஷ்டம் வந்தால் உதவமாட்டான், தமிழக மீனவர்களை பிடித்தால் படகுகளை ஆட்டைய போட்டுத்தான் விடுவான், பல மீனவர்கள் படகுகள் திரும்ப கூட கிடைக்காது அவர்கள் என்ன வகையான உழைக்காமல் வாழும் போலி புத்த ஜென்மங்கள்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory