» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா தெப்ப உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

வெள்ளி 21, ஜனவரி 2022 5:26:00 PM (IST)நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இருவேளையிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்த நிலையில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது.

இந்த நிலையில் தெப்பத்திருவிழா டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சொக்கப்பனை முக்கு அருகில் தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தெப்பகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பக்குளத்தில் 11 முறை வலம் வந்தனர். 11 முறை வலம் வரும் போதும் ஒவ்வொரு முறையும் மங்கல இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. இதில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory