» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் விவகாரம் : நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
வெள்ளி 21, ஜனவரி 2022 5:22:26 PM (IST)
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21-1-2022) நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். மேலும், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
விரிவான ஆய்வுக்குப் பின்னர், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
பொது மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டுமெனவும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்ச அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் நிதித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை : அமைச்சர் மனோதங்கராஜ் வரவேற்பு
புதன் 18, மே 2022 5:38:04 PM (IST)

ஜெ.வின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி பேரறிவாளன் விடுதலை: அதிமுக வரவேற்பு
புதன் 18, மே 2022 5:30:13 PM (IST)

குமரி மாவட்டத்தில் 128 மையங்களில் 37,418 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகிறார்கள் : ஆட்சியர் தகவல்!
புதன் 18, மே 2022 5:21:50 PM (IST)

குற்றால அருவியில் குளிக்க தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 18, மே 2022 5:14:13 PM (IST)

தாய்மையின் இலக்கணமாக அற்புதம்மாள் விளங்குகிறார் : முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
புதன் 18, மே 2022 5:03:10 PM (IST)

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் : காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
புதன் 18, மே 2022 4:15:45 PM (IST)
