» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை காவல்துறை உருவாக்கிய விடுப்பு செயலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வெள்ளி 21, ஜனவரி 2022 3:24:37 PM (IST)



சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள போலீசாரின் விடுப்பு செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்,  வெளியிட்டார்.

சுமார் 5800 காவல் ஆளிநர்களை கொண்ட மிகப்பெரிய எண்ணிக்கையிலான சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் முதல், சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலையில் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமைக்கு இடையே தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விடுப்பு பெற வேண்டி வழிவழியாக உதவி ஆய்வாளர், ஆய்வாளர், உதவி ஆணையாளர்களை நேரடியாக சந்தித்து மனு சமர்ப்பித்து விடுப்பாணை பெற்று, பின்னர் ஆயுதப்படை அலுவலகத்தில் தினசரி நாட்குறிப்பில் முறையாக பதிந்து செல்லவேண்டும். இது கடினமான பணியாக இருப்பதால் காவல் ஆளிநர்களின் நலன் கருதி இந்த செயலி முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

காவல் ஆளிநர்கள் தங்களிடம் உள்ள கைபேசியில் தமிழ்நாடு காவல் என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே நேரடியாக தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, வாராந்திர அனுமதி விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டி மூலமாக சமர்ப்பிக்கலாம். இது வழிவழியாக அவர்களுடைய மேல் அதிகாரிகளுக்கு சென்றடையும். விடுப்பு ஆணை பெற்றுக் கொண்ட காவல் ஆளிநர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று கடவுச்சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம்.

ஈட்டிய விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளை பொறுத்தவரை காவல் ஆணையாளர் அலுவலக விடுப்புப் பிரிவு மற்றும் நிர்வாக அலுவலர் சரிபார்ப்பிற்குப்பின், பணிப்பதிவேட்டில் பதிவு செய்து காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்) அவர்களுக்கு விடுப்பு ஆணை பெறுவதற்கு அனுப்பப்பட்டு விடுப்பு ஆணை வழங்கப்படும். இந்த செயலியில் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் மூன்று மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேர காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து மேலனுப்ப தவறினால் படிப்படியாக காவல் ஆளிநர்களது கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அதிகாரிகளை சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலி, காவல் ஆளிநர்களின் விடுப்பு எடுக்கும் நடைமுறை சிரமத்தை முழுமையாக குறைப்பதோடு, வெளிப்படையான தன்மையை உருவாக்குகிறது. இணைய தளம் வசதி இல்லாதவர்கள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள 2 செயலி மூலம் குறுஞ்செய்தி வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory