» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடி திறந்தார்

புதன் 12, ஜனவரி 2022 4:34:52 PM (IST)

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக, மொத்தம் ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி அடங்கும்.

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர் வரை மொத்தம்  1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவக் கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் நரேந்திர மோடி விருதுநகரில் இன்று நடைபெற இருந்த பிரமாண்ட விழாவில் நேரில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என்றும், இந்த விழாவில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலினும் கலந்துகொள்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று திடீரென அதிகமாக பரவுவதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதனால்  பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்தபடி காணொலி காட்சி மூலம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைத்தார். இவ்விழாவில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.


மக்கள் கருத்து

உபிJan 14, 2022 - 08:55:45 AM | Posted IP 162.1*****

கொத்தடிமைகளுக்கு 39 கோடியில் கட்டுமரம் சமாதியாம்..

Nandri Thiru Modi avargaleமே 17, 1642 - 07:30:00 AM | Posted IP 173.2*****

thamilagathiku 11 maruthuva kalloorigal valangiya thiru Modi avargaluku nandri....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory