» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தயவுசெய்து முகக்கவசத்தோடு வெளியில் வாருங்கள் : பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

செவ்வாய் 4, ஜனவரி 2022 3:30:19 PM (IST)சென்னை அண்ணா சாலையில் முதல்வர் நடத்திய திடீர் ஆய்வில் பொதுமக்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா என திடீர் ஆய்வை மேற்கொண்டார். அண்ணா சாலையில் உள்ள ரிச் தெரு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஒட்டியுள்ள பகுதிகளில் எல்லாம், பொதுமக்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது சாலையின் ஓரம் நின்றிருந்த மக்கள் அவரை உற்சாகத்தோடு வணங்கினர். 

அவர்களின் அருகே சென்றவர் முகக்கவசம் இல்லாதவர்களுக்கு அறிவுறுத்தி முகக்கவசம் வழங்கினார். சாலையில் சென்ற பொதுமக்களில் சிலர் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை அழைத்து முதல்வர் தன் கையில் வைத்திருந்த முகக்கவசங்களை அளித்தார். ''தயவுசெய்து முகக்கவசத்தோடு வெளியில் வாருங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்களுக்கு கரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தயங்காமல் அபராதம் விதிக்க வேண்டும் என நேற்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory