» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முல்லைப் பெரியாறு பிரச்சனை: தமிழக-கேரள எல்லையில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை

ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:31:59 PM (IST)



தமிழக-கேரளதமிழக-கேரள எல்லை லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும் என்று கோரி இன்று கேரள மாநிலத்தில் பைக் வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு அனுமதிக்கக் கூடாது என்று பெரியார் வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு கோரிக்கை வைத்தனர். தமிழக-கேரள எல்லையை முற்றுகையிட்டு போராடுவோம் என்று அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஐந்து மாவட்ட விவசாயிகளை, உத்தமபாளையம் ஏ. எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் மறுத்தனர். சாலை மறியல் செய்வதற்கு அனுமதி தாருங்கள், கேரளத்தில் வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறது என்று கோரிக்கை வைத்தனர். போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பென்னிகுயிக் மண்டபம் செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் எதிரொலியாக, குமுளி லோயர் கேம் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. எல்லை லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டம் எதிரொலியாக, குமுளி லோயர் கேம் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory