» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

சனி 4, டிசம்பர் 2021 4:46:40 PM (IST)



மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக அதிகளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பிரதான அணைகள் நிரம்பிவிட்டன. மணிமுத்தாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 115.50 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 697 கனஅடிநீர் வினாடிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 118 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.அணையில் நீர் திறப்பால் சுமார் 11, 134 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறும். மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளை வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.



அணையின் நீர் இருப்பு மற்றும் தண்ணீர் வரத்தை பொறுத்து இந்த ஆண்டுக்கான முன்னுரிமை பகுதியான 1,2-வது ரீச்சுகளின் வழியாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று காலை தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory