» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை

வெள்ளி 26, நவம்பர் 2021 7:26:21 PM (IST)

கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாக இருந்தது. இதனால் நேற்று நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  மேலும், மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை சாலை, முக்கடல் சங்கமம் பகுதி ஆகிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, நாளை (27.11.2021)    மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory