» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! : அண்ணாமலை ட்வீட்

புதன் 27, அக்டோபர் 2021 11:36:50 AM (IST)

ரூ.500 கோடி இழப்பீடு கோரிய விவகாரத்தில், "நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்" என பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிஜிஆர் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு தமிழக மின்சார துறை அமைச்சர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

ட்விட்டரில் இது தொடர்பாக அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் நடைபெற்றது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிஜிஆர் நிறுவனம் அண்ணாமலைக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஒரு வாரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், அவதூறு பரப்பியதற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கோரியுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள அண்ணாமலை, "சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள் நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory