» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரப்பை வெட்டியதால் தகராறு: விவசாயி கொலை - வாலிபர் கைது

புதன் 27, அக்டோபர் 2021 10:14:02 AM (IST)

சொக்கம்பட்டி அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (64), விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் (32). இவர்களுக்கு சொந்தமான வயல் பகுதி வைரவன்குளத்தில் உள்ளது. இந்த வயல்களுக்கு அருகில் சொக்கம்பட்டி கர்ணம் தெருவைச் சேர்ந்த சந்தனபாண்டியன் (40) என்பவருக்கு சொந்தமான வயலும் உள்ளது.

கருத்தப்பாண்டி, அவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வயல் வரப்பு பகுதியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த சந்தனபாண்டியன் நீங்கள் எப்படி வரப்பை வெட்டலாம் என்று அவதூறாக பேசி, தகராறு செய்துள்ளார். மேலும், ஆத்திரம் அடைந்த சந்தனபாண்டியன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கருத்தப்பாண்டியை வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கருத்தப்பாண்டி  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory